எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இந்து சமயத்தின் விழாவான நவராத்திரி வாணி விழா விழா நிகழ்வுகள் (19) அதிபர் பி.ஜெனற்ராஜ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
செல்வி டீ. யோகராணி ஆசிரியரின் வழிகாட்டலில், இந்து சமய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்குபற்றுதலுடன் விஷேட பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க புத்தளம் வலய கல்வி பணிமனையின் மனைப் பொருளியல் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி.விஜயலக்சிமி, பாத்திமா மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான திருமதி லோரேஸ்வரி, செல்வி. வத்சலா பிரியதர்சினி ஆகியோரும் மற்றும் பாடசாலையின் உதவி அதிபர், ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை மேலும் இந்து சமய மாணவர்களின் நடனங்கள், பேச்சு, சொற்பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகள் அலகரித்தன.
இந்த நவராத்திரி விழாவானது இப்பாடசாலை வரலாற்றில் மிக நீண்டகாலத்துக்கு பின் நடந்தப்பட்ட இந்து சமய விழாவாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.














