JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆடிசன் எகடமி கல்வியகத்தின் அறிமுக செயலமர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் கேக் வகைகளின் உற்பத்திகளை முறையாக அங்கரிக்கப்பட்ட கல்வியகத்தின் ஊடாக கற்றுக் கொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஆடிசன் எகடமி ( ARTISON ACADEMY) கல்வியகத்தின் அறிமுக செயலமர்வு ஒன்று செவ்வாய்க்கிழமை (20) கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் எகடமியின் பணிப்பாளர் எம் எப் எம் பௌகான் தலைமையில் இடம்பெற்றது

கேக் பயிற்சி நெறி தொடர்பாக இடம்பெற்ற இவ் இலவச அறிமுக செயலமர்வில் இன்றைய நவீன உலகில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை கேக் தொடர்பாகவும் அவைகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவு அதன் உற்பத்தி பொருட்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் புதிதாக கற்பிட்டி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆடிசன் எகடமி கல்வியகத்தின் முறையாக அங்கரிக்கப்பட்ட சான்றிதழ் கொண்ட கற்கை நெறி அதில் உள்ள நன்மைகள் என்பவற்றுடன் கேக் உற்பத்தி செய் முறை பயிற்சியும் விளக்கங்களுடன் வழங்கப்பதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال