JobVibe.lk - Sri Lanka Job Portal

இரணவில சமிந்துகமவில் ரூபா. ஐந்து மில்லியன் மதிப்பிலான புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா பேரழிவால் சிதைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மற்றுமொரு மக்கள் நல முயற்சியில் இரணவில சமிந்துகமவில் ரூபா. ஐந்து மில்லியன் மதிப்பிலான புதிய வீட்டிற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

முன்னைய ஆட்சியை போல் அல்லாமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச தங்குமிடத்தையும் இழப்பீட்டையும் வழங்குவதன் மூலம், மக்கள் மீதான தனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறது. இது வரலாற்றில் எந்த அரசாங்கமும் வழங்காத ஒரு நடவடிக்கையாகும்.

மகா சங்கததினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அரசாங்கக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக, இரணவில பிரிவின் பிரதேச சபை உறுப்பினர் தருஷி பெர்னாண்டோ, பிரதேச சபை மற்றும்  பிரதேச செயலகத்தின் அரசாங்க அதிகாரிகள், பிரதேச வாசிகள் என பலரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அரசின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அங்கீகாரத்தை வழங்கிய மக்களுக்கும், பேரிடரால் நிலைகுலைந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பும் உண்மையான மக்கள் சார்ந்த மாற்றம் அரசினால் கொண்டு வரப்படவுள்ளது.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال