(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி உலக தபால் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (09); "ஒரே அஞ்சல் வலையமைப்பு எல்லையற்ற சாத்தியக் கூறுகள்" என்ற இந்த வருட உலக தபால் தின கருப்பொருளை மையமாக கொண்டு புத்தளம் பிரதான தபால் அலுவலகத்தின் ஏற்பாட்டில், இலங்கை தபால் சேவையின் நவீனமயப்படுத்தியிருக்கும் சேவைகளை துண்டுப்பிரசுரம் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வூர்வலத்தில் பிரதான தபால் அதிபர் ஏ.ஏச்.எப். அமீர், மேற்பார்வை உயரதிகாரி திரு. குணரத்ன, சிற்றூழியர் பொறுப்பதிகாரி திரு. கசுன் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இலங்கைத் தபால் சேவையை நடைமுறையில் இருப்பதைவிட மேலும் வினைத்திறன் மிக்கதாகவும், பொதுமக்களுக்குச் சேவைகளை இலகுவாக வழங்கும் வகையிலும் நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






