JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் சாஹிரா கல்லூரியில், மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

குருநாகல் சாஹிரா கல்லூரியில், மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (29) பாடசாலை பிரதான மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் கே.டி.ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மாநகர சபை பிரதி மேயர் அசாருத்தீன் மற்றும் வடமேல் மாகாண கல்வித் திணைக்கள தமிழ் மொழி பிரிவு பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ஏ. ரியாஸ், குருநாகல் கல்வி திட்டமிடல்  பிரதிப்பணிப்பாளர் தரங்கணி, பிரதி கல்வி பணிப்பாளர் ஜுலிக்கா, ஆசிரிய ஆலோசகர் எம்.ராபி உள்ளிட்ட கல்வி பணிப்பாளர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், ஹெல்பிங் ஹேன்ட் தலைவர் ரம்சி, செயலாளர் சுல்பி, ஹைடெக் செயலாளர் மிட்லாஜ், கணக்காளர் தானிஷ் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 மாணவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு அதிதிகளினால் அவர்களுக்கு சின்னங்களும் அணிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளையும் மாணவர் தலைவர்கள் செய்திருந்தார்கள். அதேபோல் இந்நிகழ்வை சிறப்பிப்பதற்கு ஆசிரியர்களும், பாடசாலையின் ஊழியர்களும் இணைந்து மிகச் சிறப்பாக இதனை செய்து முடித்தார்கள்.

இந்த நிகழ்வை சிறப்பிக்க உதவி புரிந்த அனைவருக்கும் பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.


























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال