JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் சாதனை மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வின் வரிசையில் கற்பிட்டி கோட்ட மட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி நகர அமைப்பாளர் எம் எப் எம் றில்மியாஸ் ஏற்பாட்டில் எதிர்வரும் 2026/11/01 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான என் டி.எம் தாஹீர்  தலைமையில் கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீன் கலந்து கொள்வதுடன் விஷேட அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ எம் ஜவாத் அத்தோடு கௌரவ அதிதிகளாக புத்தளம் வலய கல்விப் பணிமனையின் கல்வி திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஆர் தீப்தி பெர்ணான்டோ மற்றும் கல்வி அபிவிருத்தி பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.எம்  காந்திலதா ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கற்பிட்டி கோட்ட மட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் கடந்த 2025 ம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகள் பெற்ற மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال