JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்.

எம்.யூ.எம்.சனூன்

கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டலங்குடா, பெரிய குடியிருப்பு, வன்னி முந்தல் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை, 

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் கையளித்தார்.

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு  "தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை" எனும் அரசின் வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ், உப தலைவர் சமன் குமார, புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.குமாரசிங்க, கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி, வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் அதில்ஸான், தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி தலைவர்களான நேவில், நிகால், அனர்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சிபாஸ், கிராமங்களின் அரச உத்தியோகத்தர்கள், கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்துகொண்டனர்.

















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال