JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொத்தாந்தீவு ரஹ்மத் புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கரீமா (நஸ்மியா) அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொத்தாந்தீவு ரஹ்மத் புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கரீமா (நஸ்மியா) அவர்கள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் காலம் சென்றவர்களான மதார் மொஹிதீன் ஹனிபா, ரஷீதா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், சாஹுல் ஹமீது அவர்களின் அன்பு மனைவியும், அஸ்ரா, அப்ராஸ், சபான், சாஜித்,  சஹீல் ஆகியோரின் அன்புத் தாயும் அஸ்வாத், அப்ரா, அஸ்னா  ஆகியோரின் அன்பு மாமியாரும்,  ஹாரிஸ் (அரூஸ்), ஜாபிர் நசார், சர்மிளா, நயீமா, சம்ரத் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال