JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் புதிய இலவன்குளத்தில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு.

எம்.யூ.எம்.சனூன்

வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதிய இலவன்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பம் நிரந்தர வீடு ஒன்று திங்கட்கிழமை (05) கையளிக்கப்பட்டுள்ளது.

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு "தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை" எனும் அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் இந்த புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே. எம்.பைசல் இதனை வீட்டு பயனாளியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.குமாரசிங்க, வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் ஆர்.பிரபாகரன், வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் சம்பத், தேசிய மக்கள் சக்தியின் குழுத் தலைவரும், வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினருமான சுரங்க, வண்ணாத்திவில்லு அமைப்பாளர் பத்திரன, வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் பிரியந்த, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ், பிரஜா சக்தி தலைவி அல்பென்சின், கிராமத்தின் அரச உத்தியோகத்தர்கள், வண்ணாத்திவில்லு கிளீன் ஸ்ரீலங்கா அமைப்பாளர் ரமீஸ், கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال