எம்.யூ.எம்.சனூன்
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தளம் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய "பிரதேச இலக்கிய விழாவில்" கனிஷ்ட பிரிவு கவிதை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் தனதாக்கி சாதித்துள்ளது.
இந்த போட்டியில் முதலாம் இடத்தினை மாணவி வ.பாதுஷாவும், இரண்டாம் இடத்தினை மாணவி ஜ.டேனுஜாவும், மூன்றாம் இடத்தினை மாணவி பா. சம்ஹாவும் பெற்று பாடசாலைக்கும், மணல்தீவு கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிக்கு மாணவிகளை தயார் படுத்தி பயிற்சி வழங்கிய தமிழ் பாட ஆசிரியர் திருமதி. ரிஸ்னாஸ் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய உப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பீ. ஜெனற்ராஜ் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.




