எம்.யூ.எம்.சனூன்
அக்டோபர் 31ஆம் திகதி தேசிய ரீதியாக நடைபெறவுள்ள “அத்தம கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டம் புத்தளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலும் இடம்பெறுவதற்கான வரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் பிரஜா சக்தி தலைவர் எம்.ஏ.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
தமது கிராமத்தைத் தூய்மையான, அழகான, ஆரோக்கியமான சூழலுடன் கூடிய கிராமமாக மாற்றும் நோக்கில், இந்த தேசிய வேலைத்திட்டத்தில் அனைவரும் பங்கு பற்ற முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீதிகள் மற்றும் பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், குப்பைகளை முறையாக அகற்றி தூய்மை படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் சமூக ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இது அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மட்டுமல்ல, தமது கிராமத்தின் எதிர்காலத்திற்காக அனைவரும் பங்களிக்க வேண்டிய சமூகப் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள், பெண்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வேலைத்திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
