JobVibe.lk - Sri Lanka Job Portal

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நீண்ட காலமாக போதியளவு அபிவிருத்தி செய்யப்படாததால், அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் கேள்வியெழுப்பிய அவர், வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் என்னவென்பதை கேட்டறிந்தார்.

அத்துடன், அவ்வாறான வேலைத்திட்டம் இல்லையெனில், அதற்கான காரணத்தையும் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரினார்.

வாழைச்சேனை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் முக்கிய சுகாதார நிலையமாக விளங்கும் இவ்வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை விரைவாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

-- ஊடகப்பிரிவு




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال