JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்குக் கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், கடற்படையினரின் உதவியுடன் கரைக்குக் கொண்டு வரப்பட்டார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

திருகோணமலைக்கு அப்பால் கிழக்குக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், சனிக்கிழமை (03 அக்டோபர் 2026) கடற்படையினரால் அவசரமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வியாழக்கிழமை (2026 அக்டோபர் 01) திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 'வேணுஷ புத்தா' என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல், திருகோணமலையிலிருந்து சுமார் பதினொரு (11) கடல் மைல் தொலைவில் கிழக்குக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. கப்பலில் இருந்த மீனவர்களில் ஒருவர் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, அவரைக் கரைக்குக் கொண்டுவரத் தேவையான உதவி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக, கிழக்கு கடற்படை கட்டளையகத்துடன் இணைக்கப்பட்ட P460 அதிவேகத் தாக்குதல் கப்பலை அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, மீனவரைக் கடற்படைக் கப்பலில் ஏற்றிய பின்னர், கடற்படையினர் அவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து, விரைவாகத் திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலைப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இலங்கையின் கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கை கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.












Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال