JobVibe.lk - Sri Lanka Job Portal

அஷ்ஷெய்க் இஹ்ஸான் நவவிக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் கௌரவமும் பிரியாவிடையும்.

எம்.யூ.எம்.சனூன்

அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.இஹ்ஸான் நவவி அவர்கள், முதுகலைக் கல்வியைத் தொடரும் நோக்கில், மலேசியப் Unizsa பல்கலைக்கழகத்தில் M.ED Master of Education கற்கைநெறியைத் தொடர்வதற்காக மலேசியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் இணைந்து பல்வேறு சமூக, மார்க்க மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்துள்ளார்.

அவரது இப்பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவரது கல்விப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பும் நோக்கிலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் அவருக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வு (14) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, அவருக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி உள்ளிட்ட அதன் அங்கத்தவர்களால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன், துஆப் பிரார்த்தனைகளுடனும் அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

அவரது கல்விப் பயணத்தை இலகுவாக்கி, அவர் தேர்ந்தெடுத்த கற்கைநெறியைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் இதன்போது வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அவர் பெற்றுக்கொள்ளும் கல்வியை முழு உலக முஸ்லிம் சமூகத்திற்கும், குறிப்பாக புத்தளம் நகரக்கிளையில் வாழும் மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய கல்வியாக அமைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கப்பட்டது.

அஷ்ஷேக் இஹ்ஸான் நவவி அவர்களின் கல்விப் பயணம் வெற்றிகரமாக அமையவும், அவர் தனது இலக்குகளை அடையவும், அனைத்து நன்மைகளையும் பெற்றுக்கொள்ளவும் புத்தளம் நகர மக்கள் அனைவரும் பிரார்தனை புரியுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال