JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திர உற்சவத்தில் அம்மனுக்கு பட்டு சார்த்தும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் மிகவும் தொண்மை வாய்ந்த, வரலாற்று மிகுந்த ஆலயமாக கருதப்படுகின்ற புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திர உற்சவமானது ஞாயிற்றுக்கிழமை (11) பாரம்பரிய முறைப்படி ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகின்ற அம்மனுக்கு பட்டு சாத்துகின்ற அல்லது அம்மனுக்கு பட்டு எடுக்கின்ற நிகழ்வானது புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற பாரம்பரியமான நடராஜ தேவர் குடும்பத்தினரின் வியாபார நிலையத்திலிருந்து ஆரம்பமானது.

புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள இந்த இந்த வியாபார நிலையத்திலிருந்து புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்துக்கு அம்மனுக்கு பட்டு சாத்தும் பொருட்டு பட்டு, சீர் வரிசைகளோடு மேள தாள வாத்தியங்களுடன் கொண்டு செல்லப்பட்டது. 

தேவர் குடும்பத்தினரால் இதன் ஆரம்ப நாளின் உபயம் இடம்பெறுகிறது.

சீர்வரிசை கொண்டு செல்கின்ற வழியில் புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற மற்றுமொரு பழைமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ சித்தி விநாயகர் காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று, இந்த ஊர்வலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ அம்பலவாணன் சர்மா அவர்கள் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தி வைத்தார்.

அம்மனுக்கு பட்டு கொண்டு செல்லும் இந்த நிகழ்வானது புத்தளம் நகரின் ஒரு பாரம்பரிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

தொடர்ந்து பத்து தினங்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து பூஜைகள், உற்சவங்கள் இடம்பெற்று எதிர்வரும் 20 ஆம் தேதி விஜய தசமி தினத்தன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊர்வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال