JobVibe.lk - Sri Lanka Job Portal

உலக வீட்டுத் தினத்தை முன்னிட்டு புத்தளம் ரத்மல்யாய மற்றும் தம்மன்னாகமயில் இரு வேறு வீட்டு திட்டங்கள்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தம்மன்னாகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் இரு வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. 

"தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை" எனும் அரசாங்கத்தினுடைய வீட்டுத்திட்டத்துக்கு அமைவாகவே இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் திங்கட்கிழமை (05) இவைகளை கையளித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் சுமுது பி.விதானகே, புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.குமாரசிங்க, வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் கசுனி விக்ரமசூர்யா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான பிரஜா சக்தி தலைவர் இஸ்ஸதீன் கியாஸ், ரஜிதா, கித்சிரி, பிரஜா சக்தி தலைவர் நிமேஸ், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள், கிராம உத்தியோகத்தர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال