(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
‘கடல்சார் மாசுபாடு சம்பவங்களுக்கான பிராந்திய தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (Colombo Security Conclave - CSC) கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 01) கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான துணை ஒருங்கிணைப்பாளரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், இந்தியா, மாலைத்தீவு, மொரீஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் கடல்சார் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள், தேசிய மட்டத்திலான தயார்நிலை மற்றும் பதிலளிப்பு வழிமுறைகள், கடல்சார் கள விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, பிராந்திய தகவல் பரிமாற்றம், முன்கூட்டிய எச்சரிக்கைகள், பரஸ்பர உதவி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டது.






