JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 59 நபர்கள் கைது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினரால், 2026 செப்டம்பர் 11 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 59 நபர்களும் 23 டிங்கி படகுகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, திருகோணமலை வாகரை, மூதூர், உப்பவேளி, கிரீன்பே, கதிரவேளி, பிளாக் ஸ்டாப், பவுல் கொயிண்ட், கிண்ணியா, நிலாவெளி, குபுருப்பிட்டி, வெருகல், பல்சேனை, புதுமாத்தளன், சாதுகுளம், யாழ்ப்பாணம் வெத்தலைக்கேணி, கட்டைக்காடு, கோவிலன், மன்னார் தாவுல்பாடு மற்றும் சவுத்பார் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கும் வகையில்,  கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காக வாகரை, கொட்பே, முல்லைத்தீவு, மூதூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மீன்பிடி மற்றும் நீரக வள திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.














Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال