எம்.யூ.எம்.சனூன்
"சொந்தமான ஓர் இடம் - ஓர் அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் அடிப்படையில், குறைந்த வருமானம் கொண்ட குழுவினருக்கு 10,000 வீடுகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, கட்டி முடிக்கப்பட்ட 5,000 வீடுகள் பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ, நவகத்தேகம, மகாகும்புக்கடவல மற்றும் பல்லம ஆகிய பகுதிகளில், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பல விழாக்கள் அண்மையில் இடம்பெற்றன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்தன இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த இந்த வீடுகளை பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமக கையளித்தார்.
நடைபெற்ற இந்த வீட்டுத் திறப்பு விழா, இலங்கை முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து பிரதேச செயலக மட்டத்திலும் குறைந்த பட்சம் ஒரு வீட்டையாவது திறந்து வைக்க திட்டமிட்டிருந்தது.
"சொந்தமான ஓர் இடம் - ஓர் அழகான வாழ்க்கை" என்ற தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், அரசாங்க ஒதுக்கீடான, புத்தளம் மாவட்டத்தில் மட்டும் ரூபா 44,000 மில்லியனில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் 25 வீடுகளை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்திருந்தார்.
இந்த ஆண்டை விட 2027 ஆம் ஆண்டில் அதிக வீடுகளை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இந்த நாட்டு மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் என்றும் அமைச்சர் இந்த நிகழ்வுகளின் போது வலியுறுத்தினார்.
வளம்மிக்க நாடு - ஓர் அழகான வாழ்க்கை' என்ற கொள்கைத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வசதியான வீடுகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய வீட்டு வசதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிற அனைத்து அமைப்புகளையும் குறிப்பிட்டு, அவர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







சரி இதில் எத்தனை முஸ்லிம்களுக்கும் எத்தனை தமிழ் மக்களுக்கும் விடுகள் கொடுக்கப்பட்டது.எல்லாம் சிங்களவர்களுக்குதான்
ReplyDelete