(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பிரதிநிதிகளுடன் இணைந்து, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள Defense Threat Reduction (DTRA) மற்றும் அமெரிக்க போக்குவரத்து திணைக்களத்தின் VOLPE Center மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் 22) கொழும்பு தகவல் அறியும் மையம் மற்றும் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
இந்த விஜயத்தின்போது, கொழும்பு தகவல் அறியும் மையம் மற்றும் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் பங்களிப்பு, செயற்பாடு மற்றும் திறன் குறித்தும், அத்துடன் கடல்சார் தகவல் பகிர்வு, கடல்சார் பரப்பு தொடர்பான விழிப்புணர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு, மற்றும் பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்தும் அந்நிகழ்வில் பங்கேற்ற பிரதிநிதிகள் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.




