எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் பாடசாலை மட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பாடசாலை மட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்கள், கோட்ட மட்டத்தில் நடைபெற்ற 25 போட்டிகளில் பங்கெடுத்து முதலாம் இடம் 09, இரண்டாம் இடம் 06, மூன்றாம் இடம் 03 இடங்களை பெற்றுள்ளனர்.
கோட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வலய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். வலய மட்டப் போட்டிகளில் மாணவர்கள் முதலாம் இடம் 05, இரண்டாம் இடம் 04, மூன்றாம் இடம் 03 இனை தக்க வைத்தனர்.
வலய மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம் இடம் 03, மூன்றாம் இடம் 01 (இலக்கணப் போட்டி பிரிவு - 3 நுஹா) ஆகிய இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர்.
மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற 03 நிகழ்வுகள் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டன.
மாகாண மட்டத்திலான போட்டியில் கவிதையாக்கம் (பிரிவு 3) எம்.ஐ.யூ.மர்யம், தமிழறிவு வினா-விடை (பிரிவு 1 - தரம் 6, 7) எம்.என்.எப்.நஜ்லா, எம்.என். நதா சஹ்ரிஷ், எம்.எஸ்.எப்.அலீசா, எம்.எப்.சிமா, எம்.ஐ. திக்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழறிவு வினா-விடை (பிரிவு 2 - தரம் 8, 9) எம்.ஆர். றுசாபா, எம்.எஸ்.எப். சஸ்னீன், எம்.எச்.எப். ஹப்னா, எம்.எஸ்.எப்.அம்னா, யூ.காவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில், தமிழறிவு வினா-விடை பிரிவு 1, பிரிவு 2 ஆகியவற்றில் பங்குபற்றிய மாணவர்கள் தேசிய மட்டப் பங்கேற்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
சிறப்புச் சாதனையாக, கவிதையாக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தரம் 11 மாணவி எம்.ஐ.யூ. மர்யம் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களை மிகச் சிறந்த முறையில் பயிற்றுவித்து, வழிநடத்திச் சென்ற இணைப்பாடவிதான உதவி அதிபர் திருமதி எஸ்.எம். இல்ஹனா, பாட இணைப்பாளர் ஆசிரியை திருமதி ஆயிஷா பானு, தமிழ் மொழித்தினப் போட்டி இணைப்பாளர் ஆசிரியர் ரிம்சிகான் மற்றும் தமிழ் பாட ஆசிரியர்கள் அனைவருக்கும், மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் அதிபர் சரீனா பர்வீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.




