எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா அதிபர் எஸ்.எச்.எம்.அஸான் தலைமையில் (07) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களைச் சிறப்பாக வழி நடாத்திய வகுப்பசிரியர் திருமதி டொரின் மங்களிகாவுக்கும், அதிபர் எஸ்.எச்.எம். அஸான் அவர்களுக்கும் சிறப்பு கௌரவச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
சித்தியடைந்த மாணவர்களின் புள்ளி விபரங்கள் :
எம்.ஏ. யூசுப் சாஹித் 147, எஸ்.எஸ்.அயிமன் யூசூப் 147, எஸ்.எப். சரீஹா 147, எம்.ஏ.எம் அம்ஹர் 140, ஐ.பரா ஹனீ 138, எம்.எப். ஹயா அமானி 137, எம்.ஆர்.எம் சஹ்தி 133 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்
இந்நிகழ்வுக்கான நினைவுச் சின்னங்களை "சாதிக் லெப்பை பவுண்டேஷன்" வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோருக்கு பழைய மாணவர் சங்கம், பெற்றோர் மற்றும் சமூகத்தினரால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.





















