JobVibe.lk - Sri Lanka Job Portal

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி கைப்பற்றப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இணைந்து திங்கட்கிழமை (2026 செப்டம்பர் 07) முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேகநபரான பெண் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.  

இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'கோடாபய' நிறுவனமும் முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட இச்சோதனை நடவடிக்கையின் போது, புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய இடமொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது, வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்களுடன் சந்தேகநபரான பெண் ஒருவர் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டார்.  

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அச் சந்தேகநபரும் மீன்களும் முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال