JobVibe.lk - Sri Lanka Job Portal

இளைஞர் அமைப்புக்களின் பொறுப்புக்கள் தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இன்றைய இளைஞர் அமைப்புக்களின் பொறுப்புக்கள் தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (06) பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நெப்ஸோவின் ஏற்பாட்டில் அதன் புத்தளம் மாவட்ட செயற்பாட்டாளர் எம்.பீ.எம் ஹிஜாஸ் தலைமையில் இடம்பெற்றது 

இச் செயலமர்வில் உணவு தன்னாதிக்கம் தொடர்பாகவும் செயற்கை இரசாயனங்களின் ஆதிக்கம் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் இவற்றை மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் மேலும் மக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற ஒரு அரசியல் யாப்பிற்காக நிலைமாறுகால நீதியின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் நெப்ஸோ முன்னெடுத்து வரும் மக்களின் அழுத்த செயற்பாடுடன் கூடிய கையெழுத்து சேகரிப்பு திட்டம் பற்றிய விரிவான விளக்கம் நெப்ஸோவின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே பத்மநாதன் வழங்கினார்.

அத்தோடு நீரியல் சூழல்  பாதுகாப்பு மற்றும் அதன் அழிவு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்டல் தாவரங்களின் வளர்ப்பு என்பன பற்றிய தெளிவூட்டல் நெப்ஸோவின் இளைஞர் அமைப்பின் செயலாளர் எம் ஆர் எப் றிப்லாவினால் வழங்கப்பட்டது.

மொழி தொடர்பான விஷேட அறிவூட்டல் மொழி என்றால், என்ன மொழியின் முக்கியத்துவம்,  மொழியின் பயன்பாடு என்பன பற்றிய அறிவூட்டலை மொழிபெயர்ப்பாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான எம்  ஜே.ஏ நாசீர் வழங்கியதுடன் இச் செயலமர்வில் பள்ளிவாசல்துறை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரும் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவருமான ஏ. சீ.எம். மபாஹீர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال