எம்.யூ.எம்.சனூன்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் மாவட்ட மட்டத்திலும், வடமேல் மாகாண மட்டத்திலும் புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலை மாணவி முஹம்மது தில்ஹசான் ஆபியா எனும் மாணவி தமிழ் மொழி மூலம் 177 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இது இவ்வருட பெறுபேறுகளின் பிரகாரம் பாடசாலைக்கு கிடைத்துள்ள கெளரவமாக கருதப்படுவதாக பாடசாலை அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி தெரிவித்துள்ளார்.
இம்மாணவி புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மது தில்ஹசான், இல்ஹானத் தம்பதிகளின் புதல்வியாவார்.
மாணவிக்கு நன்கு பயிற்சியளித்த வகுப்பாசிரியை பாத்திமா ரைஸா மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.இஸ்ஸத் ஆகியோருக்கும், தொடரான ஒத்துழைப்புகளை வழங்கிய மாணவியின் பெற்றோர்களுக்கும் அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.



