(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Senior Colonel FU Xiao வெள்ளிக்கிழமை (2026 செப்டம்பர் 04) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், இவ் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்குமிடையே நினைவுப்பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.





