JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய சமுத்திர வள வாரத்தை முன்னிட்டு கடற்படையினரால் பொத்துவில் விஸ்கி பொயின்ட் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

'கிளீன் ஸ்ரீ லங்கா' செயலகமும் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த 'தேசிய சமுத்திர வளப் பாதுகாப்பு வார' தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்திகரிப்பு திட்டங்களின் தொடர் ஒன்று வெள்ளிக்கிழமை (2026 செப்டம்பர் 25) தென்கிழக்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, தென்கிழக்கு கடற்படை கட்டளையினால் பொத்துவில் 'விஸ்கி பொயின்ட்' கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏனைய பங்குதாரர்களின் பங்களிப்புடன் கடற்கரை சுத்திகரிப்பு திட்டமொன்று நடத்தப்பட்டது. இவ் வேலைத் திட்டத்தின் போது கடற்கரையில் சேகரிக்கப்பட்டிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, கடற்கரை சூழல் அமைப்பை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பேணிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.












Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال