JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வான் வீதியில் இருந்து மலேரியா கால்வாய் வீதியில் அத்தம வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

எம்.யூ.எம்.சனூன்

“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தோடு இணைந்த பிரதான சுத்தப்படுத்தும் பணிகள்  புத்தளத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல்  தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், காவல்துறையினர், பிரஜா சக்தி  தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சங்கங்களின் அங்கத்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், புத்தளம் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இணைந்து ஆர்வத்துடன்பங்கேற்றனர்.

நகரின் தூய்மையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், சமூக ஒற்றுமையையும் பொது பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது.

மேலும் இச்சுத்தப்படுத்தும் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال