எம்.யூ.எம்.சனூன்
"புதிய மாற்றம் 2026" வேலைத்திட்டத்தின் கீழ் ஏத்தாளை றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் சகல துறைகளையும் மேம்படுத்தும் நோக்கில் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான் கானின் தலைமையில் மற்றுமொறு சாதனை பதிவாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த 2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் மாணவி எஸ்.எப்.ரீஹா 135 புள்ளிகளையும், சிங்கள மொழி மூலம் மாணவன் யெனுல் தௌமிக 139 புள்ளிகளையும், மாணவி நிஹன்சா செனுகி 139 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்து ஏத்தாளை பாடசாலையின் வரலாற்று புத்தகத்தின் பக்கங்களில் தமது பெயர்களை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளனர்.
இச்சாதனை நூற்றாண்டு காணவுள்ள பாடசாலைக்கான மழலைகளின் அன்புப் பரிசாக கருதப்படுவதாக அதிபர் எம். ஐ.எம். இம்ரான்கான் பெருமையுடன் தெரிவித்தார்.
இந்த வெற்றியை பெற்றுத்தர உதவிய வகுப்பாசிரியர்களான திருமதி முஸ்லிஹா மற்றும் திருமதி நிலந்தி பெர்னான்டோ ஆகியோரின் அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
மேலதிக வகுப்புக்களை வழிநடாத்திய அருணாகரன், அயாஸ்கான், இஸ்ஸத் ஆகிய ஆசிரியர்களுக்கும் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும், துணை நின்று தோல் கொடுத்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அதிபர் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் வெளியானதும் குறித்த மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்த அதிபர் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நேரடியாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




