JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒன்பது மாணவர்கள் சித்தி

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்டத்துக்குட்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  தற்போது வெளியான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஒன்பது மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு  மேல்  பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் இக்பால் மூசீன் தெரிவித்தார்.

அதன்படி எம்.எப் அயான் 149 , எம்.டப்யூ அன்சாப் 146, எம்.டி ஆசீர் அஹமட் 144,   டி.எம் ஆதீகா  செயினப் 142, எம். எஸ் சாலி 137,  ஐ.கே  அயாஸ் அஹமட் 135,  எம.எப்.எம் மசீன் 135, எம் ஆஏ.எம் அசாரிப் 132, எம் எம் எம் பயிஷான் 131 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் இம் மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதிபர் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال