(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்போது வெளியான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ் எச் அசான் தெரிவித்தார்.
அதன்படி எம்.ஏ. யூசுப் சாஹித் 147 , எஸ்.எஸ்.அயிமன் யூசூப் 147, எஸ்.எப் சரீஹா 147, எம். ஏ. எம் அம்ஹர் 140, ஐ.பரா ஹனீ 138, எம் எப் ஹயா அமானி 137, எம் .ஆர்.எம் சஹ்தி 133 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் இம் மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதிபர் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
