JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  தற்போது வெளியான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு  மேல்  பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஐ. என். எம். எம். லாஹிர் தெரிவித்தார்.

அதன்படி எம்.ஏ.எப் றஹ்மா 168 , எம்.எப்.ஏ யூசூப் 148, எம்.ஏ. ஆமீனா 137,   ஏ ஆயிஷா 135, ஏ.எஸ்.எப் சாபீகா 133, எம் எப் எப் ஆலியா 131 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் இம் மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதிபர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலமாக ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ. சீ. எப். நஸ்ரின் (A.C.F.Nasreen), வகுப்பாசிரியர் ஜே. எம். ஜொய்தா, அதிபர்  ஐ. என். எம். எம். லாஹிர், பிரதி அதிபர் எஸ். எஸ். நஸ்மி, பகுதித்தலைவர் ஏ. எச். எம். இர்ஷாத் ஆகியோர் படத்தில் காணலாம்.




வகுப்பாசிரியர் திருமதி ஜே. எம். ஜொய்தா அவர்களுடன் சித்திபெற்ற மாணவர்கள்.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال