(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இம் முறை இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் கற்பிட்டி கோட்டத்தில் உள்ள மாம்புரி ரோமன் கத்தோலிக்க சிங்கள, தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக விஷேட தேவையுடைய மாணவர்கள் பிரிவில் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி ஹேரத் முதியன்ஷலாகே ஹேஷான் தில்ஹார 115 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ நிஷாந்தி ஹிபோலிட் தெரிவித்துள்ளார்
இம் மாணவரின் சித்திக்காக அயராது உழைத்த ஆசிரியர்களான ஓ.வீ.எஸ்.என் மல்ஷானி மற்றும் எப் எம் பர்ஷானா ஆகியோருடன் பெற்றோர்களான ஹேரத் மற்றும் டி. தர்ஷனி ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
