JobVibe.lk - Sri Lanka Job Portal

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிட்ட இலங்கைகான ஜப்பான் தூதுவர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

‘டிட்வா’ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த நுவரெலியா ‘யுனிக் வீவ்’ கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக இலங்கை கடற்படையினரின் மனிதவளப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதற்காக இலங்கைகான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அக்கியோ இசோமாட்டா (Akio Isomata)  வெள்ளிக்கிழமை (2026 செப்டம்பர் 18) பங்கேற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கலந்துகொண்டார்.

ஜப்பான் அரசு, சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM), யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடனும் கடற்படையினரின் மனிதவளப் பங்களிப்புடனும் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த இடைக்கால வீட்டுத்திட்டம், கடந்த 2026 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நுவரெலியா 'யுனிக் வியூ' கிராமத்தில் இடம்பெயர்ந்த முப்பத்தைந்து (35) குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, குறித்த இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதற்காகப் பங்கேற்ற இலங்கைகான கௌரவ ஜப்பான் தூதுவரினால் அவ்வீடுகளுக்கான திருத்த வேலைகளுக்கான உபகரணத் தொகுதிகளும் கட்டில் விரிப்புத் தொகுதிகளும் வழங்குவது இந்தப் பார்வையிடல் விஜயத்திற்கு இணைவாக இடம்பெற்றது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال