(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட கல்விசார் குழு ஆலோசகர் (சிவில் சேவை) திருமதி அன்விதா சிங்ஹ (Mrs Anvita Sinha) தலைமையிலான, 16 சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 31) கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இதற்கமைய, இந்த விஜயத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழுத் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று, உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதி, ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவை சந்தித்தனர். பயிற்சித் துறை தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே நினைவச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும், இந்த கல்விச் சுற்றுலாவின் போது இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழுவினர் கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளுக்கும், நாட்டின் கவரத்தக்க சுற்றுலாத் தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.







