JobVibe.lk - Sri Lanka Job Portal

ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு கடல்சார் துறையின் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் கௌரவமிக்க ‘Order of Maritime Merit’ விருது வழங்கப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கடல்சார் துறைக்காக ஆற்றிய சேவை மற்றும் தொழில்முறை சிறப்பைப் பாராட்டி பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவமிக்க ‘Order of Maritime Merit’ விருது, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றும் இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 31)  கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வைத்து வழங்கப்பட்டது.   

சமுத்திரத் துறையின் முன்னேற்றத்திற்காகக் குறிப்பிடத்தக்க சேவையாற்றிய மற்றும் கடல்சார் துறையில் தொழில்முறைத் திற வெளிப்பாடுகளைக் காண்பித்த சிறந்த நபர்களுக்கு இந்த விருதை வழங்கும் முறை 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்கமைய, கடற்படை ஆய்வுத் துறையின் முன்னேற்றம், பிராந்திய சமுத்திர ஒத்துழைப்பு மற்றும் பிரான்ஸ்-இலங்கை இடையிலான சமுத்திரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக ரியர் அட்மிரல் தம்மிக குமார வழங்கிய தனித்துவமான பங்களிப்பைப் பாராட்டி, இலங்கைகான பிரான்ஸ் தூதராலேயே இந்த கௌரவமிக்க விருதுக்காக ரியர் அட்மிரல் தம்மிக குமார பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றி, இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிராந்திய சமுத்திர ஆய்வு மையத்தை (Regional Centre for Maritime Studies - RCMS) நிறுவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் ரியர் அட்மிரல் தம்மிக குமார வழங்கிய பங்களிப்பு அங்கு சிறப்பான முறையில் பாராட்டைப் பெற்றது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال