JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை புத்தளம் தெற்கு கோட்டத்தில் முதலிடம்: புலமையாளர்கள் கௌரவிப்பு....!.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் பதினொரு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.வை. ஹுதைபா தெரிவித்தார்.

சித்தி அடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (08) காலை அதிபர் எம்.வை.ஹுதைபா தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பிதாவும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார். 

பாடசாலையின் பிதாவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா, மாணவர்களின் இந்த வெற்றிக்கு பின்னணியில் இருந்து வழிகாட்டிய அதிபர், ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், பெற்றோர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் இந்நிகழ்வின்போது தெரிவித்தார்.

புத்தளம் தெற்குக் கோட்டப் பாடசாலைகளில் தொடர்ந்தும் அதிக மாணவர்களைத் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்யும் பாடசாலை, இம்முறையும் புத்தளம் தெற்குக் கோட்டத்தில் அதிக மாணவர்களைச் சித்தியடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இம்முறை பாடசாலையில் 11 மாணவர்கள் சித்தியடைந்து, புத்தளம் தெற்குக் கோட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தத்துள்ளனர்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال