JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் 05 மில்லியன் பெறுமதியான புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு...!.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயல் காரணமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (06) ஞாயிற்றுக்கிழமை  புத்தளம் மணல்தீவு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பிரதேச சபையின் மணல்தீவு வட்டார உறுப்பினரும், பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவருமான ஜிப்ரி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன், மணல்தீவு கிராம அரச உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال