(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கிரியேட் இலக்கிய வட்ட உறவுகளின் கற்பிட்டி விஜயமும் தமிழ் கலை இலக்கிய மன்றம் உறவுகளுடனான இலக்கிய சந்திப்பும் எதிர்வரும் சனிக்கிழமை (26) பிற்பகல் 5 மணிக்கு மன்றத்தின் உப தலைவர் அதிபர் நவ்ப் இல்லத்தில் மன்றத்தின் தலைவர் அரூஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
வரலாற்றில் ஒரு மைற் கல்லாக அமைய உள்ள இவ் இலக்கிய உறவுகளுடனான சந்திப்பின போது கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் காணப்பட்ட மற்றும் தற்போது காணப்படுகின்ற கலை இலக்கியங்கள் தொடர்பாகவும் அதன் வெளியீடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதுடன் இவ் இலக்கிய சந்திப்பின் ஊடாக வரற்ச்சி நிலையில் உள்ள கலை இலக்கிய துறையை எழுச்சி நிலையை நோக்கி கொண்டு செல்லவதற்கும் வழி வகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

