JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பாலாவியில் டித்வா நிவாரண நிதி வழங்கப்படவில்லை என வீதிக்கு இறங்கிய பொது மக்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பாலாவி கிராமத்தில் உள்ள பொது மக்கள் கடந்த டித்வா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசின் நிவாரண கொடுபபனவு எனஸ வீடு கழுவதற்காக சகல மக்களுக்கும் வழங்கப்பட 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு மாத்திரம் வழங்கப்பட்டதாகவும் ஏனைய எவ்வித கொடுப்பனவுகளையும் பாலாவி மக்களுக்கு புத்தளம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை என்ற கோரிக்கைகளை முன் வைத்து பாலாவி சந்தியில் புதன்கிழமை (23) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன் தமக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உரிமை மீறப்பட்டுள்ளதனை சுட்டிக் காட்டி புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் எச் எம் நியாஸ் புத்தளம் பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மக்கள் கடந்த டித்வா புயலினால் வீடுகள் மற்றும் வீட்டுடமைகள் வீட்டு உபகரணங்கள் தளபாடங்கள் என சகல விதத்திலும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடு கழுவதற்க்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைத் தவிர ஏனைய எவ்வித கொடுப்பனவுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்பதனை சுட்டிக் காட்டும் வகையில் பாலாவி குவைத் விலேஜ், மல்லிகா புரம், சோல்டன் முன்னாள் குடியிருப்பு , தல்கஸ்கந்த என்கின்ற ஒத்தைபனை மற்றும் பச்சைக்காடு ஆகிய பிரதேச மக்களுக்கே டித்வா புயல் பாதிப்பு நிதி வழங்கப்படாமல் உள்ளதனை சுட்டிக் காட்டியதுடன் இம் மக்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال