JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தைச் சேர்ந்த பாத்திமா சுபியானி “சிறந்த சமூக சேவையாளர்” விருது பெற்றார்.

எம்.யூ.எம்.சனூன்

சமூக சேவை, மனித உரிமைகள், கவிதை, எழுத்து மற்றும் ஊடகத் துறைகளில் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, புத்தளத்தைச் சேர்ந்த முகம்மது பாரூக் பாத்திமா சுபியானி தினச்சுடர் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தினச்சுடர் பத்திரிகையினால் வழங்கப்பட்ட இவ்விருது, சிறந்த சமூக சேவையாளர் என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடகம், கவிதை மற்றும் எழுத்துத் துறை, ஊடகம் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தினச்சுடர் தேசிய விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வு, ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் 17ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு பொது வாசிகசாலை மண்டபத்தில் காலை நடைபெற்றது.

தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான திருவாய்மொழி கேசவன் கலைஞன் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடகக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நூலாசிரியர்கள், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 46 பன்முக ஆளுமைகள் இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளம் நகரை சேர்ந்த பாத்திமா சுபியானி, 24 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவை மற்றும் மனித உரிமைத் துறையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதுடன், கல்வி, சமூக நீதி, பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கம், சமூக வலுவூட்டல், எழுத்து மற்றும் கவிதை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

அவரது நீண்டகால சமூகப் பணிக்கும் பன்முக ஆளுமைக்கும் கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரம், புத்தளம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال