JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் சுற்றுமதில் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவு.

எம்.யூ.எம்.சனூன்

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுமதில் நிர்மாணப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. 

கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ் சபையின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தைச் சுற்றி முழுமையான சுற்றுமதில் அமைப்பதுடன், அதன் உட்புறப் பாதைகளையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், அவர் பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள் சுற்றுமதில் நிர்மாணப் பணியை முழுமையாக நிறைவு செய்துள்ளார்.

மேலும், பொருளாதார மத்திய நிலையத்தின் உட்புறப் பாதை அமைக்கும் பணிகளும் தற்போது சுமார் அரைவாசி நிறைவு பெற்றுள்ளன. 

மீதமுள்ள பணிகளையும் எதிர்வரும் காலங்களில் படிப்படியாக நிறைவு செய்து, பொருளாதார மத்திய நிலையத்தை முழுமையான வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்த தவிசாளர் ரிகாஸ், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال