JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2026

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள் மற்றும் உதவி வகுப்பு தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.எல்.அப்துல் ஜௌபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனைக்குப் பொறுப்பான ஆசிரியர் மேஜர் எம். சிப்லி சம்சுதீன் ஒழுங்கமைப்பாளராகச்  செயற்பட்டு இந்நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா ஏ. மலிக், பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் ஆகியோர்  நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாகவும் 38ஆவது தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி டீ.சி. இந்திக, அயல் பாடசாலை அதிபர்களான எம்.எஸ்.எம். பைஸல், ஏ.பி. செரோன் டில்ராஸ், பிரதி அதிபர் எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட விசேட விருந்தினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஒழுக்கற்றுக்குழு உறுப்பினர்கள்  ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது புதிதாக நியமிக்கப்பட்ட மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்கள், உதவி வகுப்பு தலைவர்கள் ஆகியோருக்கு சின்னங்கள் சூட்டப்பட்டதுடன், மாணவத் தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

மாணவர் தலைவர்கள் தமது பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை தொடர்பான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாணவர்களின் இசை அணிவகுப்பு, பொல்லடி, நடன நிகழ்ச்சிகள், வரவேற்பு நடனம், சிறப்பு உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும்  இதன்போது இடம்பெற்றன.

பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
































Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال