JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் கடந்த 15 வருடங்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு...!.

 எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் கடந்த 15 வருடங்களாக கடமையாற்றி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (23) காலை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஐ.எல்.சிராஜுதீன், பிரதி அதிபர் ஏ.நபீல், பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் இதுவரை காலமும் சேவையாற்றி பல மாணவர்களின் உயர் கல்வி துறைக்கு வழி வகுத்த ஆசிரியர்களான எம்.ஏ.எம்.ரியாஸ்

(பௌதீகவியல்), எம்.எல்.எம். சைபுதீன் (இரசாயனவியல்), எம்.என்.எம்.நூமான்கான் (பௌதீகவியல்) மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஆசிரியர் நியமனம் பெற்றுச் சென்ற எம்.ஏ.எப்.சஹ்ரினா,எம்.பீ.எப்.ரைஷா பர்ஹத் மற்றும் ரிஸ்கா (MSO) ஆகியவர்களுக்கான பிரியாவிடை வைபவமே சிறப்பாக நடந்தேறியது.

இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளும் பாடசாலை நிர்வாகத்தினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.





















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال