JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி நல்லாந்தழுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் கபீர் (GS) அவர்கள் காலமானார்.

நல்லாந்தழுவையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் கபீர் (GS) அவர்கள் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் காலம் சென்ற நெய்னா முஹம்மது, மரியம் பீவி ஆகியோரின் அன்புப் புதல்வரும், பஸீலா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான ஹாஜரா உம்மா, அல்ஹாஜ் அப்துல் வதூத் மற்றும் அப்துல் வஸீர், பதுருன்நிஸா (ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மொஹமட் சப்றாஸ் (ஆசிரியர்), பாத்திமா சப்ரினா, மொஹமட் சபான் (CDO), மொஹமட் சன்பர், அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் மொஹமட் சன்பாஸ், பாத்திமா சஹ்னா, சஅத் அஹமட் ( அப்துல்லா), ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்ஹாஜ் அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் ஸல்மானுல் பாரிஸ் (தீனி), மாஹிர் (ஆசிரியர்), பர்வீன் (GS), சபீஹா (CO), பாத்திமா சில்மியா, அல் - ஹாபிழா பர்வினா, பாத்திமா நிஹாதா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (17) திங்கட்கிழமை காலை 8.00am மணியளவில் நல்லாந்தழுவை ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال