JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு அரியதொரு வக்குப் பணி

 எம்.யூ.எம்.சனூன்

இஹ்யாவுல் உலூம் அகடமி தலைவர் ஏ.எஸ்.எம்.ரிஸ்வான் அவர்களால், தனது அன்பிற்குரிய தாய், தந்தையரின் ஞாபகார்த்தமாக வக்குப் செய்யப்படவுள்ள புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் மேல்மாடிக் கட்டிடப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, வக்குப் செய்வதற்குத் தயாரான நிலையில் உள்ளன.

அக்கட்டடத்தை நேரில் பார்வையிட்டு, அதன் மேற்பார்வை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக இஹ்யாவுல் உலூம் அகடமி தலைவர் ஏ.எஸ்.எம். ரிஸ்வான் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது மத்ரஸாவின் முதல்வர் அஷ்ஷேக் ஸனூஸ் ரஹ்மானி, நிர்வாக செயலாளர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி மற்றும் பொருளாளர் டாக்டர் அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு, கட்டடத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال