JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஸ்மாயில்புரம் வை.எம்.எம் ஏ புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் இஸ்மாயில்புரம் கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA) நிறுவனத்தின் புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும் வை.எம்.எம்.ஏ புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியர் தலைமையில் இஸ்மாயில்புரத்தில்இடம்பெற்றது.

புத்தளம் இஸ்மாயில்புரம் கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டு அக் கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுப்பதுடன் இஸ்மாயில்புரம் கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டல் மற்றும் சமூக நலனுக்கான புதியதொரு பாதை உருவாகுதல் என்பதனை நோக்கமாக கொள்ளப்பட்டதுடன் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அதன் படி தலைவராக எம். ஹரிஸ், உப தலைவராக எம் ஜிப்ரி, செயலாளராக எம்.எஸ்.எம் ஸஸ்லான், உப செயலாளராக எம் ஜாபிர், பொருளாளராக எம்.றில்வான் ஆகியோருடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பஷில், சுபியான், வசீர், அஜ்மல், ரப்லி, அஸ்லம் ஆகியோரும் கல்வி மற்றும் கலை என்பவற்றிற்கு பொறுப்பாளராக பர்மில் விளையாட்டிற்கு பொறுப்பாளராக நப்லி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال