JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரின் "நெல்லி முடுக்கின்" புதிய பயணம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் ஆரம்ப காலத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்திய பாரம்பரிய ஒரு ஒழுங்கை பாதையே   “நெல்லி முடுக்கு”பாதையாகும்.

புத்தளம் உடையார் வீதியையும், நெடுங்குளம் வீதியையும் இணைக்கும் ஒழுங்கை இதுவாகும்.

பல தசாப்தங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் மறக்கப்பட்டிருந்த இந்தப் பாதை தேசிய மக்கள் சக்தியினால் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

புத்தளம் முதலாம் வட்டாரம்  பிரஜாசக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவர் சர்ராஜ் லாபிரின் முன்மொழிவுக்கு அமைய, புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் வழிகாட்டலில் புத்தளம் மாநகர சபையினால் இப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு பாதைக்கு தேசிய மக்கள் சக்தி அரசினால் மீண்டும் உயிர் கிடைத்துள்ளது. "நெல்லி முடுக்கின்" பழைய நினைவுகளோடு புதிய பயணம் ஆரம்பமானது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال