JobVibe.lk - Sri Lanka Job Portal

திகழியில் வை.எம்.எம் ஏ புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி திகழி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA) நிறுவனத்தின் புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும் வை.எம்.எம்.ஏ புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியர் தலைமையில் திகழி சைனிங் ஸ்டார் காரியாலயத்தில் இடம்பெற்றது.

திகழி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டு அக் கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுப்பதுடன் திகழி கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டல் மற்றும் சமூக நலனுக்கான புதியதொரு பாதை உருவாகுதல் என்பதனை நோக்கமாக கொள்ளப்பட்டதுடன் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அதன் படி தலைவராக ஏ.எம். றிஸ்பிகான் உப தலைவராக எம் அமான், செயலாளராக எம். ஐ.எம் பௌஸ்கான், உப செயலாளராக எம் ஏ.அப்ரார், பொருளாளராக எம்.நிஸ்வர் ஆகியோருடன் பல்வேறு துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பகுதித் தலைவர்களும்  தெரிவு செய்யப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال