JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய மாபெரும் இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் வாழ் மக்களின் ஆன்மீக, கலை மற்றும் கலாசார ஆர்வங்களை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய மாபெரும் இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகள் மிக விரைவில் நடைபெறவுள்ளன.

1448 ஹிஜ்ரி, 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு, இஸ்லாமிய விழுமியங்கள், பண்பாடு, கலைத்திறன் மற்றும் சமூக ஒற்றுமையை மையமாகக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்படவுள்ளது.

சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் மூத்தவர்கள் என புத்தளத்தில் உள்ள அனைத்து வயதினரும் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இஸ்லாமிய அடிப்படையிலான அறிவு, படைப்பாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் பல்வேறு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்வின் ஊடாக இளம் தலைமுறையினரிடையே இஸ்லாமிய அடையாளம், நற்பண்புகள், சமூகப் பொறுப்பு மற்றும் கலாசார விழிப்புணர்வை வளர்ப்பதுடன், குடும்பங்களையும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பாக இதனை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

“அறிவும் திறமையும் இணைந்து, இஸ்லாமிய விழுமியங்களுடன் வளர்வோம்” என்ற நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இம்மாபெரும் நிகழ்வின் திகதி, இடம், போட்டி விபரங்கள், வயதுப் பிரிவுகள் மற்றும் பதிவு தொடர்பான முழுமையான தகவல்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

அனைவரும் ஆர்வத்துடன் தயாராகி, தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

புத்தளத்தின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசாரத்திற்கு ஒரு புதிய அத்தியாயமாக இது கருதப்படுகிறது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال